கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 2 பெண்கள் வெடிவிபத்தில் படுகாயம்

12 0

யாழ்ப்பாணம் முகமாலையில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இளம் தாயார் உட்பட இரு பெண்கள்  படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்களே இந்த வெடிவிபத்தில் படுகாயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்று காலை முகமாலை பகுதியில் இராணுவத்தினர் ஆக்கிரமித்திருக்கும் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது ஏதிர்பாராத விதமாக புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி ஒன்று வெடித்து சிதறியது.

இதில் பரந்தனை சேர்ந்த 6 வயதுப் பிள்ளையின் தாயாரான குனேந்திரன் ரேணுகா (வயது-25) என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இவரிற்கு அருகில் நின்ற இன்னொரு பெண் உத்தியோகத்தர் மேகலதா என்பவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

சம்பவத்தை அடுத்து இருவரும் ஆரம்ப முதலுதவிகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவருக்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டது.

முகம் மற்றும் நெஞ்சு பகுதிகளை பாதுகாக்கவே கவசங்கள் அணியப்படுவதாகவும் கைகளை பாதுகாக்க போதுமான உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதில்லை எனவும் விசாரணைகளில் தெரியவருகின்றது.

Related Post

வவுனியா வீரபுரத்தில் தமது காணிகள் பறிபோவதாக மக்கள் ஏக்கம்

Posted by - March 16, 2017 0
வவுனியா மாவட்டம் வீரபுரம் கிராம மக்களின் வாழ்வாதாரத்திற்காக பிறேமதாச அரசினால் வழங்கப்பட்ட. 2 ஏக்கர் நிலத்தினையும் மைத்திரிபால அரசினால் அபகரிக்கத் திட்டமிடப்படுவதாக வீரபுரம் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.…

கிழக்கு மாகாணத்தில், ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் உள்ளீர்க்கும் நடவடிக்கை(காணொளி)

Posted by - May 4, 2017 0
  கிழக்கு மாகாணத்தில் ஆயிரம் பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பதற்கும், தகவல் தொழில் பயிற்சியாளராக உள்ளீர்ப்பதற்கும் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட வேலையற்றபட்டதாரிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.…

கொக்குதீவு பறவைகள் சரணாலயம் இனந்தெரியாத விசமிகளினால் தீமூட்டி எரிப்பு!

Posted by - December 12, 2017 0
இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் கொக்குதீவு பறவைகள் சரணாலயம் இனந்தெரியாத விசமிகளினால் தீமூட்டி எரிக்கப்பட்டுள்ளது. குறித்த சரணாலயம் அதிகளவிலான அரிய வகை வெளிநாட்டு பறவைகள் வந்து செல்லும்…

ஆவா குழுவினை எதிர்க்கின்றேன் – சம்பந்தன்

Posted by - November 1, 2016 0
ஆவா குழுவினை தாமும் எதிர்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஆவா குழு தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஆவா குழுவிற்கு…

கிழக்கு மாகா­ணத்தின் பொரு­ளா­தா­ரத்தை­ அபி­வி­ருத்தி செய்­வ­தற்­காக விசேட அபி­வி­ருத்தி!

Posted by - July 30, 2018 0
கிழக்கு மாகா­ணத்தின் பொரு­ளா­தா­ரத்தை­ அபி­வி­ருத்தி செய்­வ­தற்­காக விசேட அபி­வி­ருத்தித் திட்­டங்­களை மேற்கொள்ள நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம். கிரா­மிய மட்­டத்­தில் அபி­வி­ருத்தி புரட்­சி­களை 2019 – 2020 ஆம் ஆண்­டு­களில்…