கோட்டா மீது உள்ள பயமே அமெரிக்காவில் வழக்கு- மஹிந்த

180 0

அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு எவ்வித சதி முயற்சியும் இல்லை என்றும், தேவையான எல்லா சந்தர்ப்பங்களிலும் அதற்கு தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் பெல்லன்வில ரஜமகா விகாரையில் இடம்பெற்ற தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வின் பின் ஊடகங்களிடம் பேசும் போதஞ அவர் இவ்வாறு கூறினார். 

இன்று மின் துண்டிப்பு, நீர் மற்றும் அதிக வரி காரணமாக மக்கள் கஷ்டப்படுவதாகவும், அற்கு ஒரிருவர் இல்லாமல் முழு அமைச்சரவையும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். 

எதிர்காலத்தில் அனைத்து தேர்தல்களிலும் வெற்றிப் பெறுவதாகவும், சகல கட்சிகளும் ஒன்றிணைந்து தேவையான காலம் வரும் போது ஜனாதிபதி வேட்பாளர் சம்பந்தமாக தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் கருத்து தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, அது கோட்டாபய ராஜபக்‌ஷ மீது இருக்கும் பயத்தை வெளிக்காட்டுவதாக கூறினார்.