பாலைத்தீவில் கடலாமைகளுடன் மூவர் கைது

19 0

பாலைத் தீவின் வடக்குபகுதியில் இரு கடலாமைகளுடன் சந்தேக நபர்கள் மூவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு கடற்படையினர் செவ்வாய்க்கிழமை பாலைத்தீவின் வடக்கு கடற்பகுதியில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்ட போது சந்தேகத்திற்கிடமான படகொன்றை அவதானித்துள்ளனர். இதன்போது விரைந்து செயற்பட்ட கடற்படையினர், குறித்த படகை சுற்றிவளைத்து சோதனைக்குட்படுத்தியுள்ளனர். 

இதனை தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகின்ற உயிரினமான கடலாமைகள் இரண்டு உயிருடன் மீட்கபட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டள்ளனர் என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்தள்ளது.