உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்பு!

10 0

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்ட பகுதியில் இன்று காலை 8 மணியளவில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

 குறித்த தோட்டத்தில் 24ஆம் இலக்க தேயிலை மலையில் குறித்த சிறுத்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள, அதேவேளை மேலும் பல சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பதாக தெரியவந்துள்ளது.

 மேற்படி சிறுத்தை உயிரிழந்த இடத்தில் உயிரிழந்த நிலையில் நாய் ஒன்றின் உடற்பாகங்களும் இருந்துள்ளன.

 குறித்த தேயிலை மலையில் தொழில் செய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் சிறுத்தையொன்று உயிரிழந்த நிலையில் கிடப்பதை அவதானித்து, திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு  தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவத்தை அறிந்து ஸ்தலத்திற்கு விரைந்துள்ள திம்புள்ள பத்தனை பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, குறித்த சம்பவம் தொடர்பாக வனவிலங்கு பாதுகாப்பு சபைக்கு அறிவித்துள்ளதையடுத்து உயிரிழந்த சிறுத்தையை மரண பரிசோதனை செய்வதற்காக பொறுப்பேற்று வனவிலங்கு அதிகார சபைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இத்தோட்டத்தில் சில மாதங்களுக்கு மேலாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதுடன் லயன் குடியிருப்பு பகுதிகளுக்கும் சிறுத்தைகள் வந்து சென்றுள்ளதாகவும், காவலுக்காக வளர்க்கப்படுகின்ற நாய்களையும் குறித்த சிறுத்தைகள் வேட்டையாடி உண்ணுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Related Post

ரூ.193 மில்லியன் பெறுமதியான சிகரெட்டுக்கள் சிக்கின

Posted by - March 8, 2017 0
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 193 மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்கள் ஒருதொகை ஒருகொடவத்தை பகுதியில் வைத்து சுங்க பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொட்டகலை ரொசிட்டா பகுதியில் குழந்தை ஒன்று வீட்டின் மாடிப்படியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளது(காணொளி)

Posted by - March 2, 2017 0
  திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பகுதியில் குழந்தை ஒன்று வீட்டின் மாடிப்படியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். கமலதாசன் சீதையம்மாளின் ஒன்றரை வயது நிரம்பிய…

வரட்சி பாதித்த பகுதியில் டெங்கு அபாயம்

Posted by - January 22, 2017 0
வரட்சியால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் டெங்கு தொற்று அதிகரிப்பதற்கான அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பிரதேசங்களைச் சேர்ந்த மக்களால் உபயோகத்திற்காக சேகரிக்கப்படும் நீரின் ஊடாக…

துப்பாக்கியுடன் இராணுவ வீரர் கைது

Posted by - March 31, 2018 0
மத்துகம, கட்டுகஹஹேன பிரதேசத்தில் சட்டவிரோத துப்பாக்கி ஒன்றுடன் இராணுவ சிப்பாய் ஒருவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு…

கீதாவின் மனுவை விசாரிக்க ஐந்து பேர் கொண்ட நீதவான் குழு நியமனம்

Posted by - June 19, 2017 0
நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்வதற்கு ஐந்து பேர் கொண்ட நீதவான் குழு அமைக்கப்பட்டுள்ளது.