தூக்கில் தொங்கிய நிலையில் கிராம சேவையாளரின் மகன்!

15 0

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் இன்று (17.04.2019) பகல் 12.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் கிராம சேவையாளரின் மகன், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தந்தையார் (கிராமசேவையாளர்) கடமை நிமித்தம் அவரது பணிக்கு சென்றிருந்த சமயத்தில், வீட்டில் யாரும் இல்லாத நிலையில், குறித்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இன்று காலை 11.30 மணியளவில் தந்தை மகனுக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டிருந்த சமயத்தில் மகன் தொலைபேசி அழைப்பினை எடுக்கவில்லை. இதனையடுத்து குறித்த தந்தை (கிராம சேவையாளர்) வீட்டிற்கு சென்று மகனின் அறைக்கு சென்ற சமயத்தில் மகன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

குறித்த மாணவனின் தற்கொலைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில்,  பண்டாரிக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமாக மீட்கப்பட்டவர்,  வவுனியா  பிரதேச பாடசாலையொன்றின், க.பொ.த உயர்தரம் இறுதியாண்டு மாணவன் என்பதுவும் குறிப்பிடதக்கது.

Related Post

கோப்பாயில் இராணுவத்திற்கும் மக்களுக்கும் இடையில் குழப்ப நிலையா?

Posted by - November 26, 2017 0
யாழ்ப்பாணம் – கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக, அப் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

மண்டைக்கல்லாறு பாலத்தின் திருத்த வேலைகள் (காணொளி)

Posted by - April 20, 2017 0
கிளிநொச்சி பூநகரி மண்டைக்கல்லாறு பாலத்தின் திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மன்னார்-கண்டி வீதியை இணைக்கும் ஏ32 வீதியில் அமைந்துள்ள மண்டைக்கல்லாறு பாலம் நீண்ட காலமாக புனரமைக்கப்படாதிருந்த நிலையில் பெருந்தெருக்கள்…

இராணுவத்தால் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்ட தனது மகன் உட்பட 40 பிள்ளைகளின் பெயர் விபரங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டிருந்ததாக….(காணொளி)

Posted by - March 23, 2017 0
  கைதுசெய்யப்பட்ட தனது மகன் உட்பட 40 பிள்ளைகளின் பெயர் விபரங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டிருந்ததாக இராணுவத்திடம் தனது மகனை கையளித்த சங்கரப்பிள்ளை பாலலோஜினி தெரிவித்தார்.…

பேரவை மக்கள் நலலை முன்நிறுத்தி அரசிலை முன்கொண்டு செல்ல திட்டம்

Posted by - March 1, 2018 0
மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும் தமிழ்மக்கள் பேரவையின் அரசியலை மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும் என தமிழ் மக்கள் பேரவை 11 பேர் கொண்ட செயற்குழுவுக்கு ஒன்றினை நியமித்துள்ளது.

முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதி நினைவேந்தலுக்கு இடைக்கால தடை

Posted by - May 18, 2017 0
முல்லைத்தீவு- முள்ளிவாய்காலில் அருட்தந்தை எழில்ரஜன் ஒழுங்கமைத்திருந்த முள்ளிவாய்க்கா ல் நினைவேந்தல் நிகழ்வுக்கு பொலிஸார் 14 நாட்கள் தடை உத்தரவு பிறப்பித்திருப்பதாக தெரி யவருகின்றது. முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதிப்போரில்…