வட மாகாண அபிவிருத்தி குறித்து கனடா – ஈரான் அவதானம்!

9 0

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டெவொயிட் மெக்கினன் மற்றும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது.

வடமாகாணத்தில் கனேடிய அரசாங்கத்தினால் மேற்கொள்ள கூடிய அபிவிருத்தி உதவிகள் குறித்து இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. அத்தோடு கனேடிய அரசாங்கத்தின் ஆசிய விவகாரங்களுக்கான பணிப்பாளரின் இலங்கை வருகை குறித்தும், இவ்வருகையின்போது கனேடிய அரசாங்கத்தினால் வடமாகாணத்தில் முன்னெடுக்க கூடிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

இதேவேளை ஆளுநருக்கும் இலங்கைக்கான ஈரானின் தூதுவர் மொஹமட் ஷேரி ஹமிரனி ஆகியோர்களுக்கு இடையிலான சந்திப்பொன்றும் கொழும்பிலுள்ள ஈரானிய தூதரகத்தில் இடம்பெற்றது.

வடமாகாணத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டுமென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய மத்திய மாகாணத்திலிருந்து நிலக்கீழ் குழாய் வழியாக வடமாகாணத்திற்கு குடிநீரினைக் கொண்டுவருவதற்கு ஈரானிய அரசின் உதவி இதன்போது ஆளுநரால் கோரப்பட்டது.

இதற்கு சாதகமான கருத்தினை வெளியிட்ட ஈரானிய தூதுவர், முதற்கட்டமாக இது தொடர்பிலான சாத்தியமான வழிகளை ஆராயும் பொருட்டு இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற ஈரானின் மூன்று நிறுவனங்களை எந்தவித கட்டணங்களும் இல்லாமல் தன்னார்வ ரீதியில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டார்.

Related Post

பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை பெறாத ஒருவரை பிரதமராக்க மீண்டும் சிறிசேன முயற்சி- நளின் பண்டார

Posted by - December 4, 2018 0
பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை பெறாத ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அல்லது ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவை சேர்ந்த ஒருவரை புதிய பிரதமராக நியமிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார…

“1990” அம்பியூலன்ஸ்கள் நாடு முழுவதும் – நரேந்திர மோடி

Posted by - May 12, 2017 0
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள “1990” அம்யூலன்ஸ்கள் நாடுமுழுவதும் விஸ்தரிக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று நோர்வூட் மைதானத்தில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே…

அக்கரைப்பற்று பகுதியில் சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்டு மறைத்துவைக்கப்பட்டிருந்த புகையிலைத்தூள் மூடைகளை மதுவரித்திணைக்களத்தினர் கைப்பற்றினர்(காணொளி)

Posted by - February 9, 2017 0
மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த புகையிலைத்தூள் மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று கருங்கொடித்தீவு, தபாலக வீதியில் இந்தியாவின் ஒடிசா பகுதியில் இருந்து…

14 சபைகளில் ஏணி தனித்து போட்டி – மனோகணேசன்

Posted by - December 22, 2017 0
தமிழ் முற்போக்குக் கூட்டணியானது ஒருமித்த முற்போக்குக் கூட்டணி என்ற பெயரில் ஏணி சின்னத்தில் தனித்து மாவட்டவாரியாக 14 சபைகளுக்கு போட்டியிடுகின்றது. கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு மாநகர சபையிலும்,…

இலஞ்சம் பெற முற்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது

Posted by - January 30, 2019 0
இலஞ்சம் பெற முற்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.  25,000 ரூபா இலஞ்சம் பெற முற்பட்ட குற்றத்திற்காகவே அவர் இலஞ்ச ஊழல்…