ஐ.தே.க வை வீழ்த்த பலமான கூட்டணி அவசியம் – வாசுதேவ நாணயக்கார !

10 0

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மாத்திரமல்ல பொதுஜன பெரமுனவும் பொது தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலில் தனித்து போட்டியிட்டால்  தோல்வியே  கிடைக்கப்பெறும். ஐக்கியதேசிய கட்சியை வீழ்த்த வேண்டுமாயின்   பலமான   கூட்டணியமைக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நிகழ்கால அரசியல் நிகழ்வுகள் தொடர்பில்  வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பரந்துப்பட்ட கூட்டணியமைத்தல் தொடர்பில்  முன்னெடுக்கப்படுகின்ற பேச்சுவார்த்தைகள் பல கேள்விகளை   தோற்றுவித்துள்ளன.ஸ்ரீ லங்கா சுதந்திர  கட்சியின்  ஒத்துழைப்பற்ற   தன்மையின் காரணமாக பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பினர்  கூட்டணியமைப்பது பயனற்றது என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள். இரு தரப்பினரது பலவீனமான செயற்பாடுகளும்  ஐக்கிய தேசிய கட்சிக்கே   பலமானதாக காணப்படும்.

இரு தரப்பிலும் காணப்படுகின்ற போட்டித்தன்மையினால் தனித்து  போட்டியிடுவது  சிறந்தது என்று குறிப்பிடுவது தற்போதைய அரசியல்  சூழ்நிலைக்கு சாத்தியமற்றது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியினால் தனித்து போட்டியிட்டு ஒருபோதும் வெற்றிப் பெறமுடியாது.சுதந்திர கட்சியின் பலம் எத்தன்மையானது என்பதை இடம் பெற்று முடிந்த  உள்ளுராட்சி பெறுபேறுகளின் ஊடாக புரிந்துக் கொள்ளாம்.

ஐக்கிய தேசிய கட்சியினை வீழ்த்த வேண்டுமாயின் இருதரப்பினரும் விட்டுக்கொடுப்புகளுடன்  இணக்கமாக செயற்பட வேண்டும் என  தெரிவித்தார்.


Related Post

தேர்தல் முறைப்பாடுகளை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்

Posted by - December 29, 2017 0
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை மின்னஞ்சல் ஊடாக முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கும் அந்த மாவட்டத்தின் பெயரை முதலில் பயன்படுத்தி…

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக புதிய சட்டம்-நளின்

Posted by - June 19, 2018 0
பாரிய அளவில் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக புதிய சட்டங்களை அமுல்படுத்த அரசு தீர்மானித்துள்ளதாக அரச நிர்வாகம், முகாமைத்துவ மற்றும் சட்டம், ஒழுங்கு தொடர்பான பிரதி அமைச்சர்…

வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமர் கட்டியெழுப்பினர் – கபீர்

Posted by - February 6, 2017 0
தலைமையிலான அரசாங்கம் வளர்ச்சியை நோக்கி இட்டுச் செல்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கபீர் ஹாசிம் இதனை தெரிவித்தார். வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான…

நாட்டின் அதிகரிப்பு

Posted by - January 18, 2019 0
இலங்கையில் மீன் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக கடற்றொழில் நீரியியல் வள ராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். 2017ம் ஆண்டில் மொத்தமாக 33 ஆயிரம் மெற்றிக் தொன் ஏற்றுமதி…

சுதந்திர கட்சியின் தலைமையகத்துக்கு முன் கூச்சலிட்டது ஏன் என ஆராய வேண்டும் – மகிந்த ராஜபக்ஷ

Posted by - August 4, 2016 0
மகிந்த தரப்பு பேரணியின் போது ஹொரகொல்லயில் உள்ள பண்டாரநாயக்க சமாதிக்கு அஞ்சலி செலுத்தியவர்கள், சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்துக்கு முன்பாக கூச்சலிட்டது ஏன் என்று, கட்சித் தலைவர்கள்…