கடை உடைத்து பணம் கொள்ளை ; ஏறாவூரில் சம்பவம்

36 0

ஏறாவூர் காட்டுப்பள்ளிவாசலுக்கு சொந்தமான பணம் நிரப்பியிருந்த உண்டியல் மற்றும் கடையில் வைக்கப்பட்டிருந்த பணம் உட்பட இன்னும் சில பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை ( 17.04.2019 ) அதிகாலை ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியை அண்டியுள்ள காட்டுப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள பள்ளி வாசலுக்குச் சொந்தமான கடைத்தொகுதியொன்றில் குறித்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாபுஜீ தோசைக் கடையின் முன் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே நுழைந்து அங்கிருந்த பள்ளிவாசலுக்குச் சேரவேண்டிய உண்டியல் பணம் மற்றும் தோசைக் கடையின் பெட்டியிலிருந்த பணம் அத்துடன் இன்னும் சில இலத்திரனியல் பொருட்களும் திருடப்பட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில்  ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.