மின் கம்பத்துடன் மோதி ஒருவர் பலி

12 0

தபுத்தேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அந்தர வெவ, பBலளு வெவ வீதியின் எப்பாவெல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தபுத்தேகம, இகிரிவெவ வர்ணகுலசூரிய அசேல மதுசங்க (வயது 24) எனும் இளைஞரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 

கல்நேவ பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் உள்ள மின்சாரக் கம்பத்துடன் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

இவ்விபத்தில் படுகாயமடைந்த, மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற குறித்த இளைஞனை, அங்கிருந்தவர்களை தபுத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர். 

விபத்து தொடர்பில் தபுத்தேகம போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


Related Post

நாலக சில்வாவிடம் ஸ்னைப்பர் ரக துப்பாக்கி தொடர்பில் அதிரடி விசாரணை

Posted by - October 2, 2018 0
பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் இருந்து காணாமல் போயுள்ளதாக கூறப்படும் ஸ்னைப்பர் ரக துப்பாக்கி தொடர்பில்  பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவுக்கு எதிராக துப்பாக்கிகள் கட்டளைச்…

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை ஆதரித்து வாக்களிக்கப்போவதில்லை – மனோ

Posted by - November 9, 2018 0
கொள்கையுடைய தமிழ் முற்போக்கு கூட்டணி புதிய அரசாங்கத்தை எதிர்ப்பதுடன் ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையை ஆதரித்து வாக்களிக்கப்போவதில்லை என முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான…

மட்டக்களப்பில் இளம் குடும்பஸ்தர் தாக்கி கொலை

Posted by - July 15, 2017 0
மட்டக்களப்பு வாரைப் பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக வாகரை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வாகரை –…

தேங்காய் திருடனை கீழிறக்குவதற்காக பட்டாசு கொழுத்திய பொலிஸார்

Posted by - November 18, 2017 0
வாரியாபொல, மினுவன்கெவ பிரதேசத்தில் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் திருட்டுத் தனமாக தென்னை பறித்துக் கொண்டிருந்த ஒருவரை பிடித்து தோட்டத்தில் உரிமையாளரால் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

நல்லாட்சி அரசாங்கம் டிசம்பர் 31 உடன் முடிவுறுமா? இரு பக்கத்திலும் அழுத்தம்

Posted by - December 10, 2017 0
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையை எதிர்வரும் 31 ஆம் திகதியின் பின்னர் இன்னும் இரு வருடங்களினால் நீடிப்பதற்கு…