வடமராட்சி பகுதியில் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட மாணவி

11 0

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தனது சகோதரியுடன் சண்டை பிடித்துக் கொண்டு மாணவியொருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பம் யாழ்ப்பாணம் வடமராட்சி, நவிண்டில் கொற்றாவத்தை பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.

18 வயதான மாணவியொருவரே தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ மூட்டிக் கொண்டுள்ளார். இதனையடுத்து உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகஅனுமதித்தனர்.

அதன் பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட சிறுமியின் உடலில் 80 வீதமான எரிகாயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நவிண்டில் – கொற்றாவத்தை பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மூவர் இவ்வாறுதனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளனர் அதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த பகுதியில் அடுத்தடுத்து தனக்குத்தானே தீ வைத்துக்கொள்ளும் சம்பவம் இடம்பெறுவது கிராம மக்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

Related Post

07 இந்திய மீனவர்கள் கைது

Posted by - February 9, 2018 0
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் கைது செய்யப்பட்ட வேளையில் அவர்கள் மீன்பிடி…

‘இறைவனே! அவர்களை மன்னிப்பாயாக! செய்தது தவறு என்பதை அறியாதவர்கள் அவர்கள்’-விக்னேஸ்வரன்

Posted by - December 25, 2018 0
இறை தூதரின் பிறப்பைக் கொண்டாடும் இன்றைய நத்தார் தினத்தில் அனைவருக்கும் எமது நத்தார் தின வாழ்த்துக்கள் உரித்தாகுக, என வட மாகாண சபை முன்னாள் முதலமைச்சர் சி.வி.…

பூனை கடித்து ஒருவர் மரணம் – மனைவி சந்தேகத்தில் கைது

Posted by - December 16, 2017 0
பூனையொன்று கடித்ததன் காரணமாக விஷமேறிய நிலையில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் – சங்கானை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த 14 ஆம் திகதி…

கிளிநொச்சியில் உள்ள பிரதேச செயலங்களுக்கு உளவுஇயந்திரம் கையளிப்பு

Posted by - April 6, 2017 0
கிளிநொச்சியில் உள்ள பிரதேச செயலங்களுக்கு உளவுஇயந்திரம் கையளிக்கப்பட்டுள்ளது ஜனாதிபதி  செயலகத்தினால் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு கையளிக்கப்பட்ட  நான்கு உளவுஇயந்திரங்களுடன்  கூடிய  நீர்த்தாங்கிகள்  கிளிநொச்சி மாவட்ட  செயககத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது…

ஆறு காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு 10 ஆண்டு கடூழிய சிறை தண்டனை – இளஞ்செழியன் தீர்ப்பு

Posted by - May 3, 2017 0
யாழ்ப்பாணம் சுன்னாகம் காவல் நிலையத்தில் ஒருவரை சித்திரவதை செய்து கொலை செய்தமை தொடர்பில், குற்றம் சுமத்தப்பட்ட ஆறு காவல்துறை உத்தியோகஸ்தர்களுக்கு 10 ஆண்டு கடூழிய சிறை தண்டனை…