அசிட் தாக்குதலுக்கு உள்ளாகி 9 பேர் வைத்தியசாலையில்

60 0

கம்புறுபிட்டிய, ஒமாரஹேன பகுதியில் குழு ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட அசிட் தாக்குதலினால் பெண்கள் இருவர் உட்பட 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இரு குழுக்கள் இடையில் இருந்த பிரச்சினையின் காரணமாக இவ்வாறு அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதில் ஒரு குழு வீட்டிற்கும் வேனிற்கும் தீ வைத்துவிட்டு அந்த வீட்டில் இருந்தவர்கள் மீது அசிட் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தாக்குதலில் காயமடைந்தவர்கள் அக்குரஸ்ஸ மற்றும் ஆந்தபான வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் கம்பறுபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.