தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா – 2019, யேர்மனி,முன்சன், (München)

790 0

தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமான தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது ஆண்டுவிழா வாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் எனும் முழக்கத்துடன் யேர்மனியில் ஐந்தாவது மேடையாகிய தென் மாநிலமான முன்சன் நகரத்தில் நிறைவுபெற்றது.

காலை பத்துமணிக்கு ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் இந்த மாநிலத்தில் உள்ள தமிழாலயங்கள் பங்குபற்றியிருந்தன. 2018 ஆம் ஆண்டு பொதுத்தேர்விலும், கலைத்தேர்விலும், தமிழ்த்திறன் போட்டியிலும், யேர்மனி முழுவதுமாகத் தேர்ச்சி பெற்ற முதல் மூன்று மாணவர்களுள் இந்த மாநிலத்தில் உள்ள மாணவர்கள்; மதிப்பளிக்கப்பட்டனர்.அத்தேடு இந்த ஆண்டு பட்டயக்கல்வியில் தேர்வெளுதி சித்தியரைடந்த இருவர் மதிப்பளிக்கப்பட்டனர்.
பிரதம விருந்தினர்களாக யாழ். பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியர் திரு. அருணாசலம் சண்முகதாஸ் அவர்களும், முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும், மற்றும் யேர்மனியின் தேசியச் செயற்பாட்டாளர்களும். யேர்மனியில் இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்பணியாற்றிய தமிழ் வாரிதிகளும் தமிழ்மானிகளும் கலந்து கொண்டனர். மண்டப வாசலில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், தமிழ்க் கல்விக் கழகத்தின் செயற்பாட்டாளர்கள், ஆகியோர் இவர்களை அழைத்துச் செல்ல மண்டபத்திற்குள் பெற்றோர்களும், பார்வையாளர்களும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர்.

பின்பு மங்கலவிளக்கு ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு தமிழாலய மாணவர்களின் தமிழாலய கீதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது. வரவேற்புரையை தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு. செல்லையா லோகானந்தம் அவர்கள் ஆற்றினார், பின்பு கலைநிகழ்வுகளுடன் மதிப்பளிப்புக்களும் ஆரம்பமாகின. தமிழ்க் கல்விக் கழகத்தின் இளைய செயற்பாட்டாளர்களின் நெறிப்படுத்தலில் தமிழாலயங்களில் உள்ள இளையவர்களையும் இணைத்து இந் நிகழ்வை சிறப்பாக நடாத்தியிருந்தனர்.

மாணவர்களின் மதிப்பளிப்பைத் தொடர்ந்து தமிழாலய ஆசிரியர்கள், நிர்வாகிகள், மதிப்பளிக்கப்பட்டனர். இருபது வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்பணியாற்றிய ஆசிரியர்களுக்கு தமிழ் வாரிதி என்னும் மதிப்பளிப்பும், 25 வருடங்கள் நிர்வாகியாக பணியாற்றிய முன்சன் தமிழாலய நிர்வாகிக்கு தமிழ் மானி என்னும் மதிப்பளிப்பும் வழங்கப்பட்டது.

சென்ற வருடம் யேர்மனி முழுவதிலும் உள்ள தமிழாலயங்களில் பயின்ற 270 மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பை நிறைவு செய்து மதிப்பளிப்புக்கான தகுதியைப் பெற்றிருந்தனர். இவர்களுள் 60 மாணவர்கள் இந்த மேடையில் மிகச்சிறப்பாக மதிப்பளிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து யேர்மனியில் உள்ள நூற்றி இருபதிற்கும் மேற்பட்ட தமிழாலயங்களில் தமிழ்த்திறன் போட்டியில் இரன்டாம் இடத்தைப் பெற்றிருந்த முன்சன் தமிழாலயத்திற்கு வெற்றிக் கேடயம் கொடுத்து மதிப்பளிக்கப்பட்டது. அடுத்து 2017,2018ஆம் ஆண்டுகளில் தமிழ்மொழித் தேர்வில்; அதிக புள்ளிகளைப் பெற்ற தமிழாலயங்களில் மூன்றாம் இடத்தைத் தட்டிக் கொண்ட கயில்புறோன் தமிழாலயத்திற்கு தங்கக் கேடயம் கொடுத்து மதிப்பளிக்கப்பட்டது.

Related Post

இலங்கையில் வறட்சி – பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 இலட்சத்தக் கடந்தது

Posted by - January 18, 2017 0
வறட்சி காரணமாக நாடுமுழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு இலட்சத்து 44 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது. ஒரு இலட்சத்து 22 ஆயிரத்து 156 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு…

குப்பை மேடு சரிவு – பலியானோரின் எண்ணிக்கை 20ஆக உயர்வு

Posted by - April 16, 2017 0
மீதொடமுல்ல குப்பை மேடு சரிந்ததில்; சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 20ஆக உயர்வடைந்துள்ளது. இதன்போது காயமடைந்தவர்கள் 13 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில்…

இருமொழி அறிவின்மையும் இனப்பிரச்சினையும் – விக்கி

Posted by - October 24, 2016 0
இலங்கையின் அரசியல் தலைவர்களிடம் இருமொழி அல்லது மும்மொழி அறிவின்மையும், இனப்பிரச்சினை தீர்க்கப்படாமைக்கு முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு இதனைத்…

மாவீரர்கள் நினைவு விழாவில் பங்கேற்க மாவீரர்களின் பெற்றோர்களுக்கு அழைப்பு

Posted by - November 27, 2016 0
தமிழினத்தின் விடிவுக்காக போராடி தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ஒவ்வொரு வருடமும் கார்த்திகை 27ஆம் திகதி தமிழ் மக்களினால் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படுகின்றது.…

நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை அரசுடமையாக்க அனுமதி

Posted by - June 27, 2017 0
மாலபே நெவில் பெர்னாண்டோ மருத்துவமனையை அரசுடமையாக்குதல் மற்றும் சைட்டம் நிறுவனத்தின் முகாமையை விரிவுப்படுத்தல் ஆகிய யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது