புதுவருடப்பிறப்பில் 3 பிள்ளைகளின் தந்தை பரிதாபமாக பலி !

14 0

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை 2 ஆம் குறுக்குத்தெருவினைச் சேர்ந்த ம.புவிகரன் (வயது38) என்னும் 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் ஆவர்.

இன்று பிற்பகல் 3 மணியளவில் பருத்தித்துறையில் இருந்து நெல்லியடிப் பகுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவர் செலுத்திச்சென்ற மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்துக்குள்ளான குடும்பஸ்தர் உடனடியாக மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்திய சாலைக்கு  கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

கிளிநொச்சியில் விபத்து ஒருவர் பலி

Posted by - January 12, 2018 0
கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல்துறை மா அதிபர் அலுவலகம் முன் இன்று(12) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். மாங்குளம் பகுதியிலிருந்து யாழ்…

கிளிநொச்சியில் வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கியும் விடுவிக்கப்படுகிறது

Posted by - May 26, 2017 0
கிளிநொச்சி நகரில்  ஏ9 பிரதான வீதிக்கு அருகில் காணப்படுகின்ற யுத்த காலத்தில் வீழ்த்தப்பட்ட நீர்த்தாங்கியும் இராணுவத்தினரால் வரும் முப்பதாம் திகதி விடுவிக்கப்படுகிறது. கடந்த காலத்தில் நாமல் ராஜகப்கஸவினால்…

ஊடகவியலாளர்களின் தொழில் திறன் விருத்திக்கான பயிற்சிகள்

Posted by - April 18, 2017 0
கிளிநொச்சியில் முழுநேரம் மற்றும் பகுதி நேரமாக ஊடகத் தொழில் ஈடுப்பட்டு வரும் ஊடகவியலாளர்களின் தொழில் திறன்விருத்தியை மேலும் அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக கிளிநொச்சி ஊடக…

இரணைதீவு செல்வதற்கான போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கிறது

Posted by - May 3, 2017 0
கிளிநொச்சி பூநகரியின் இரணைதீவு மக்கள் தமது பூர்வீக இடத்திற்குச் செல்லவும் தங்கி நின்று தொழில் புரியவும் அனுமதிக்குமாறு மூன்றாவது நாளாகிய இன்று 2017.05.03 உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

ஆவா குழுவின் மேலும் இரு உறுப்பினர்கள் கைது

Posted by - November 21, 2017 0
ஆவா எனப்படும் குழுவின் மேலும் இரு முக்கிய உறுப்பினர்கள் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டியொன்றை சந்தேகத்தின் பேரில்…