ஹெரோயினுடன் நால்வர் கைது

255 0

திருகோணமலை குற்றத்தடுப்பு பிரிவு நேற்றைய தினம் மரத்தடி சந்தி மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது 161 மில்லி கிராம் ஹெரோயினுடன்  நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் 18, 23 மற்றும் 30 வயதுடைய திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.