கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுப்பதற்காகவே வழக்குகள் – ஜி.எல்.பீரிஸ்

207 0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடுவதை தடுப்பதற்காகவே அவரிற்கு எதிராக  அமெரிக்காவில் இரு வழக்குகள் தாக்கப்பட்டுள்ள என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடுவதற்காக  அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிடும் கோத்தபாய ராஜபக்சவின் முயற்சிகளை குழப்புவதற்காக சில சக்திகள் இதனை செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை அவர் உறுதி செய்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவிற்கு ஒவ்வொரு வருடமும் விஜயம் மேற்கொள்கின்ற போதிலும்  லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு  பத்து வருடங்களிற்கு பின்னரே  இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
உள்நோக்கம் கொண்டவர்கள் நீதித்துறையை பயன்படுத்துகின்றனரா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.