கோத்தாபாயவுக்கு எதிராக அமெரிக்காவில் இரண்டு வழக்குகள்

304 0

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அமெரிக்காவில் இரு  சிவில் வழக்குகள் தககல் செய்யப்பட்டுள்ளன. 

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் அமெரிக்காவில் வசிக்கும் மகள் அஹிம்சா விக்ரமதுங்க மற்றும் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட கனடாவில் வசிக்கும் இலங்கையரான ரோய் சமாதானம் ஆகியோர் சார்பிலேயே இந்த இரு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படு கொலைக்கு அப்போதைய பாதுகபபுச் செயலாளராக இலங்கையில் செயற்பட்ட கோத்தாபய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் என சுட்டிக்கடடியுள்ள அஹிம்சா விக்ரமதுங்க, அது தொடர்பில் தனக்கு நட்ட ஈடு பெற்றுத் தருமாரு கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றிடம் மனுவூடாக கோரியுள்ளார். 

இந் நிலையில் ரோய் சமாதானம் எனும் தமிழர் சார்பாக சிவில் வழக்கினை,  சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம், அமெரிக்காவின் ஹவுஸ்பெல்ட் ( housfeld ) எனும்  சட்ட நிறுவனத்துடன் இணைந்து கலிபோர்னியா மாவட்ட நீதிமன்றில் வழக்கை தாக்கல் செய்துள்ளது.