ஆசிய வலயத்தில் பாரிய தொழிநுட்ப மற்றும் புதிய விஞ்ஞான அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிக்க இலங்கை தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தாய்லாந்தின் பெங்கொக் நகரில் இடம்பெற்று வரும் ஆசிய ஒத்துழைப்பு அபிவிருத்தி மாநாட்டில் இன்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.
வளர்ந்து வரும் ஆசியாவை எதிர்வரும் வருடங்களில் உலகின் பொருளாதார மத்திய நிலையமாகவும் நிதி மத்திய நிலையமாகவும் மாற்றவேண்டும் எனவும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.
ஆசிய அபிவிருத்தி என்பது விஞ்ஞானத்துடனும் தொழிநுட்பத்துடனும் முன்நோக்கிச் செல்ல வேண்டும்.
விஞ்ஞான தொழிநுட்பம் மற்றும் விஞ்ஞான துறை அபிவிருத்தியின் பொருட்டு வலய நாடுகளில் அவதானம் செலுத்த உரிய நடவடிக்கைகயை மேற்கொள்ள வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

