இந்தியவும் ரஷ்யாவும் இலங்கையில் முதலீடு

315 0

medicine-exportsமருந்துப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கு இந்தியா ரஷ்யா உள்ளிட்ட சில வெளிநாடுகள் இலங்கையில் முதலீடு செய்யவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான உடன்படிக்கை ஒன்று செய்துகொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு அவசியமான மருந்துப்பொருட்களை உற்பத்தி செய்வதற்காக குறித்த உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் ஒரு வருட காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் இலங்கையில் முதலீடுசெய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.