உயிரிழந்த படையினருக்கு விசேட பூஜை!

295 0

mahinda-rm-720x480யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவத்தினருக்கான விசேட பூஜை நிகழ்வு, மட்டக்களப்பு விகாரையில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெறவுள்ளது.

இந்த விசேட பூஜை நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவாற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மட்டக்களப்பு நகருக்கு வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உரை, பிற்பகல் 02 மணிக்கு இடம்பெறவுள்ளதாகவும், இது தொடர்பாக மட்டக்களப்பு நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.