மாட்டு வண்டியில் வந்திறங்கிய வெள்ளைக்கார மாப்பிளை

338 0

weds-1மேலைத்தேயவர்கள் தமிழர்களின் கலை, கலாச்ச்சாரம், பண்பாடு என்பவற்றில் தீராத பற்றுக் கொண்டவர்கள்.  அதனால் அவர்கள் நமது கலாச்சாரத்தில் அளவுகடந்த அன்பை வைத்துள்ளனர். நமது உடை, நடை, பாவனை என எல்லாவற்றையும் தங்களது மனதில் பதித்து வைத்துள்ளனர்.

அந்த வகையில், யாழ்ப்பாணம், கைதடியில் பழமை மாறாத வகையில் இடம்பெற்ற திருமண விழா அனைவர் மனங்களிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது.

மாறுபட்ட கலாச்சார மேகத்தில் திரியும் இக்கால கட்டத்தில் வெள்ளைக்கார மாப்பிளை யாழ். தமிழ்ப் பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டு, கரம் பிடித்துள்ளார்.

திருமணத்தின் மகத்துவத்தினை உணரத் தவறும் இக்கால கட்டத்தில் தமிழர் மரபுப் படி மாட்டு வண்டியில் திருமணம் நடந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இதேவேளை, வெளிநாட்டவர்கள் தமிழர் கலாச்சாரத்தை மதிக்கும் அளவிற்கு எம்மவர் மதிக்கிறோமா என்பது நாம் ஒவ்வெருவரும் சிந்திக்க வேண்டியது.