
வெளிநாட்டில் வசிக்கும் 915 இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமைகள் வழங்கப்பட்டது.
இது தொடர்பான உறுதிப்பத்திரங்களை வழங்கும் வைபவம் நேற்றைய தினம் அமைச்சர் வஜிர அபேவர்தன தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது.
அமெரிக்கா, இலண்டன், கனடா, பிரான்ஸ், இத்தாலி, அவுஸ்திரேலியா, சுவிட்ஸலாந்து, நியுஸிலாந்து, டென்மார்க், சுவீடன் போன்ற நாடுகளில் பிரஜாவுரிமைகளைப் பெற்றவர்களுக்கே இவ்வாறு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளது.
இந்த இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் முறையானது 1987ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின பின்னர் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் திகதியிலிருந்து 23 சந்தர்ப்பங்களில் 36, 080 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமைகள் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

