வருமானவரி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை துரைமுருகன் வீட்டில் சோதனைமு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் !

364 0

காட்பாடியில் உள்ள தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீடு, பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதற்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகனின் வீடு காட்பாடி காந்திநகரில் உள்ளது.

இவரது மகன் கதிர் ஆனந்த் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். தினமும் மகனுக்கு ஆதரவாக துரைமுருகன் பல்வேறு இடங்களுக்கு சென்று தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு பிரசாரம் முடிந்து அவர் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு வருமான வரித்துறை ஆய்வாளர்களான மனோஜ், முரளிதரன், சதீஷ் ஆகியோர் வந்தனர்.