கெஹெலியவிற்கு எதிரான வழக்கு விசாரணைக்கு!

277 0

முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கான தினம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச அச்சக கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 2,30,000 ரூபாயை பயன்படுத்தி தனிப்பட்ட தொலைபேசி கட்டணத்தை செலுத்தியதாக குற்றம் சுமத்தி தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே இந்த வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு பிரதம நீதவான் நீதின்றம் தீர்மானித்துள்ளது.

பிரதிவாதிகளால் முன்வைக்கப்பட்ட எதிர்ப்பை நிராகரித்த கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்தவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் குறித்த வழக்கு தொடரப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.