முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரி மாணவி ஜானுஷா கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் 9A பெறுபேறு பெற்று சாதனை படைத்துள்ளார்.
சிறு வயதில் தந்தையை இழந்து பல துன்பங்களுக்கு மத்தியில் தாயின் அரவணைப்பில் வளர்ந்துவந்த அவர், பரீட்சையில் சாதனை படைத்து சக மாணவ மாணவிகளுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கின்றார்.
மேலும் மிகவும் கடினமான நிலையில் கல்வி கற்று சாதித்துள்ள மாணவி ஜானுஷாவின் சாதனை பலராலும் பாராட்டப்படுகிறது.
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகின. அதன் அடிப்படையில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 9,413 மாணவர்கள் 9 A சித்திகளைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


