பௌத்தர்களும் இந்துக்களும் இணைந்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் – புத்திக பத்திரன

324 0

பௌத்தர்களும் இந்துக்களும் இணைந்து நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சர் புத்திக பத்திரன தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற பௌத்த மாநாட்டினையடுத்து ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “பௌத்தர்களும், இந்துக்களும் சேர்ந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாத எந்த சூழ்நிலையும் இல்லை. எனவே இருதரப்பினரும் இணைந்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.

சகல பௌத்த விகாரைகளிலும் இந்து கடவுள்களுக்கு சிறு ஆலயங்கள் இருக்கின்றன. கணபதியினை பௌத்தர்கள் வணங்குகின்றனர். நானும் வணங்குகின்றேன்.

இலங்கைக்கு பௌத்தம் வந்தது வடக்கு இந்தியாவிலிருந்து. இந்து மதம் வந்தது தென் இந்தியாவிலிருந்து.

இந்துக்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கையையும் பௌத்தர்கள் மத்தியில் இருக்கும் நம்பிக்கையையும் ஒருமித்துக் கொண்டு செல்லுகின்ற சூழ்நிலை வேறு யாராலும் முடியாது. எங்களால் மட்டும் தான் முடியும்’ என தெரிவித்துள்ளார்.