
மக்கள் மின்சாரத்தை கட்டுப்பாடுடன் பயன்படுத்த வலியுறுத்தும் அரசாங்கம் முதலில் அமைச்சர்களின் மாதாந்த மின் கட்டணப்பட்டியலை சபையில் சமர்ப்பிக்க வேண்டும்.
ஏனெனில் இதற்கு முன்னர் அமைச்சுக்களில் இருந்தவர்கள் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான தொகையை தமது ஒரு மாத மின்சார கட்டணமாக செலுத்தியுள்ளனர். மக்களை கட்டுபாடுடன் செயற்பட கூறும் முன்னர் இந்த ஆட்சியாளர்களின் லட்சணம் என்னவென்பதை அறிந்துகொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ சபையில் வலியுறுத்தியது.

