நம்பி வாக்களித்தவர்களை அரசாங்கம் இருட்டில் தள்ளியுள்ளது!

284 0

ஆட்சியாளர்களை நம்பி வாக்களித்த மக்களை அரசாங்கம் இருட்டில் தள்ளிவிட்டதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், மஹிந்தானந்த அளுத்கமகே, மின் வெட்டு திட்டமிடப்பட்ட வகையில் செய்யப்பட்ட சூழ்ச்சி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று  இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு, மின்வலு, வலுசக்தி மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சு  மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டார். 

கெரவலப்பிட்டிய  மின் நிலையத்தை சீனாவுக்கு வழங்கும்  நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. ஏற்கனவே இதனை கைவிட வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ள நிலையிலும், இவ்வாறு சீனாவுக்கு கொடுத்தால் இலங்கைக்கு 90 பில்லியன் நஷ்டமாகும் என கூறியும் அதனை கருத்தில் கொள்ளாது சீனாவுக்கு வழங்க விலைமனுக்கோரல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.