நானுஓயா பகுதியில் இன்று கெப் ரக வாகனம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்குநேர் மோதி ஏற்பட்ட விபத்தில் கடும் காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் பெண் ஒருவரும் நுவரெலியா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அட்டன் – நுவரெலியா ஏ-7 பிரதான வீதியில் நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கிச் சென்ற கெப் ரக வாகனம் ஒன்றும் தலவாக்கலையிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கிச்சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்களும் சமர்செட் தோட்டப் பகுதியில் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற சாரதியும், அதில் பயணித்த பெண் ஒருவரும் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும், மோட்டார் சைக்களின் சாரதி மோட்டர் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாததனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


