கடலில் மிதந்துவந்த நிலையில் பீடி இலைகள் மீட்பு

634 0


மன்னார் தெற்கு கடற்பரப்பில் மிதந்துகொண்டிருந்த நிலையில், பீடி சுற்றப்பயன்படும் இலைகளை கடற்படையினர் இன்று வெள்ளிக்கிழைமை மீட்டுள்ளனர். 

மன்னார் தெற்கு கடற்பரப்பில் 33 பொதிகளில் மிதந்துகொண்டிருந்த சுமார் ஆயிரத்து நாநூற்று ஐம்பத்தாறு பீடி இலைகளை கைப்பற்றியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். 
குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் கடற்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.