பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, கோப்குழு, மற்றும் கணக்காளர் நாயகத்தின் அறிக்கையினை முழுமையான முறையாக செயற்படுத்தினால் மோசடிக்காரர்கள் தண்டிக்கப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மத்தி வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எவ்விதமான முன்னேற்றகரமாக நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் இம்மோசடியில் நேரடியாக தொடர்புபட்டுள்ளார்கள் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.


