
சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்டவர்கள் நால்வரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த மீனவர்கள் கற்பிட்டி-எருமைதீவு கடற்பரப்பில் அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட பொழுது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு திருகோணமலை பகுதியல் வெடிப்பொருட்களை பயன்படுத்தி மீன்கள் பிடித்த நபரொருவரை கைது செய்துள்ளதோடு,80 கிலோ கிராம் நிறையுடைய மீன் தொகைகள் மற்றும் கெப் ரக வாகனம் ஒன்றையும் பொலிஸாரல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
எனினும் குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களை கைது செய்துள்ளதோடு அவர்களிடமிருந்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

