கலாநிதி சேனக்க பிபிலவின் மருத்து கொள்கையை பின்பற்றி 48 வருடங்களுக்கு பின்னர் 45 வகையான அத்தியாவசிய மருந்துவகைகளின் விலையை குறைத்துள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அத்துடன் உலக நாடுகள் போற்றும் வகையில் ஆரோக்கியமான சுகாதார சேவையை மேற்கொண்டு வருவதாகவும், புற்றுநோய்க்காக கடந்த அரசாங்கத்தை விட 9 மடக்கு செலவை எமது அரசாங்கம் மேற்கொள்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு மற்றும் மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.


