வெலிபெத்த படபொல பகுதியில் நேற்று இடம்பெற்ற தீ விபத்துக்களில் பெண்ணொருவர் உட்பட இருவர் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாரகஹ சந்தியில் உள்ள மொத்த விற்பனை நிலையமொன்றின் இரண்டாம் மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக படபொல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விரைந்து செயற்பட்ட பொலிஸார் காலி மாநகர சபை தீயணைக்கும் படையினர் , தெற்கு அதிவேக வீதியின் தீயணைப்பு படையினர் , இராணுவத்தினர் , வியாபார நிலையத்தின் சேவையாளர்கள் மற்றும் பிரதேச வாசிகளுடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
அதன்போது பரவிய புகையை சுவாசித்தமையால் ஏற்பட்ட தாக்கத்தினால் பெண்ணொருவர் உட்பட இருவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர் எனவும் தெரியவந்துள்ளது.

