கண்டியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தீடீர் சுற்றி வளைப்பில் போதை மாத்திரை விநியோக மோசடி தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய போதை மாத்திரை விநியோகம் தொடர்பில் 37 வயதுடைய நபர் ஒருவரை நேற்று கண்டியில் வைத்து கைது செய்துள்ளனர்.
குறித்த நபரிடம் இருந்து 542 போதை மாத்திரைகள் மற்றும் 865 கருக்கலைப்பு மாத்திரைகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளது.
எனினும் கைது செய்த நபரிடமிருந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


