இனியும் தமிழா்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது -சுரேன் ராகவன்

431 0

இலங்கை இராணுவத்தில் உள்ள சில அதிகாரிகள் மற்றும் சில இராணுவ சிப்பாய்கள் போர் குற்றங்களை செய்துள்ளார்கள். அவா்களை தண்டிக்கவேண்டும். தண்டிப்பேன். என இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்கவே கூ றியிருக்கின்றார்.

இவ்வாறு குற்றமிழைத்தவா்கள் அடையாளம் காணப்பட்டு, அது உறுதிப்படுத்தப்பட்டால் அவா்களுக்கு சிவில் சட்டத்தின் கீழும், இராணுவ சட்டத்தின் கீழும் இரட்டை தண்டணை விதிக்கப்படவேண்டும். இனியும் தமிழா்களை ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. என வடமாகாண ஆ ளுநா் சுரேன் ராகவன் கூறியுள்ளார். 

 ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டுவிட்டு நாடு திரும்பியுள்ள வடமாகாண ஆளுநா் நேற்றைய தினம் யாழ்.பழைய பூங்கா வளாகத்தில் உள்ள ஆளுநா் அலுவலகத்தில் ஊடகங்களை சந்தித்து கலந்துரையாடினாரி 

இதன்போது கலப்பு நீதிமன்ற பொறிமுறைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியுள்ளமை குறித்து ஊடகவியலாளா் ஒருவா் எழுப்பிய கேள்விக்குபதிலளிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாரி. 

இதன்போது மேலும் அவா் கூறுகையில், 

இலங்கை அரசாங்கம் இனிமேலும் காலதாமதம் காட்டாமல் எடுக்ககூடிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவேண்டும். இனிமேலும் தமிழா்களை ஏமாற்ற முடியாது. சாட்சிகள் ஊடாக சந்தேகத்திற்கிடமற்ற முறையில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட இராணுவத்தினருக்கு தண்டணைகளை வழங்கவேண்டும். 

இலங்கையின் இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்கவே கூறியுள்ளார் இராணுவத்தில் உள்ள சிலா் குற்றங்களை செய்திருக்கின்றார“கள். அவா்களை எந்த நிலைக்கும் சென்று தண்டிப்பதற்கு தயாராக இருக்கிறேன். என அந்தவகையில் சிவில் சட்டத்தின் கீழும், இராணுவ சட்டத்தின் கீழும் குற்றமிழைத்தவா்களுக்கு இரு தண்டணைகள் வழங்கப்படவேண்டும். 

மேலும் காணாமல்போனவா்கள் அலுவலகம் ஊடாக நடவடிக்கைகளை துரிதப்படுத்தவேண்டும். அவா்களுக்கு இந்த வரவு செலவு திட்டத்திலும் 1.3 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. ஆக வே அவா்கள் இந்த வருடம் செப்டம்பா் மாதத்திற்கு முன்னதாக வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் கிளை காரியாலங்களை அமைக்கவேண்டும். 

அதனோடு காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களை அணுகி உங்களுக்கு என்ன வேண்டும்? நீதி வேண்டுமா? இழப்பீடு வேண்டுமா? என்பதை அவா்களுடைய வாயால் அறியவேண்டும். அங்கே அரசியல் கலப்புக்கள் இருக்ககூடாது. 

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களுக்கு என்னவேண்டும் என்பதை அரசியல் கட்சிகள் தீா்மானிக்ககூடாது. அவ்வாறு தீா்மானிப்பது சாரியானதும் அல்ல. மேலும் இலங்கை அரசாங்கம் மக்களுக்கு என்ன சொல்கிறதோ அதனையே சா்வதேச சமூகத்திற்கும் சொல்லவேண்டும். 

சா்வதேச சமூகத்திற்கு ஒரு கதையும், இலங்கை மக்களுக்கு இன்னொரு கதையும் கூறக் கூடாது. அதாவது தங்களால் என்ன செய்ய முடியுமோ அதனையே கூறவேண்டும். செய்ய முடியாத அல்லது செய்ய இயலாத விடயங்களை சா்வதேசத்திற்கு கூற கூடாது.காலத்தை வீணடிக்கும் செயற்பாட்டை அரசு நிறுத்தவேண்டும் என்றார்.