வில்பத்து வனப் பகுதியில் ஒரு அங்குளமேனும் காடழிக்கப்படவில்லை-அஜித்

355 0

வில்பத்து வன பிரதேசத்தில் ஒரு அங்குளமேனும் காடழிக்கப்படவில்லை என்பதை பொறுப்புடன் தெரிவிக்கின்றேன் என ராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும சபையில் இன்று தெரிவித்தார்.

அத்துடன் வில்பத்துவில் காடழிக்கப்படுவதாக ஊடகங்கள் பிரசாரம் செய்கின்றன. ஆனால் காட்டை அழித்து மக்களுக்கு காணி வழங்கிய பசில் ராஜபக்ஷ்வின் பெயரை பயன்படுத்துவதில்லை. அதனால் ஊடகங்களால் ஆட்சியை மாற்றவும் முடியும் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்கவும் முடியும். 

அதற்காக யாருடைய தேவைக்காகவும்  பொய் பிரசாரம் செய்யக்கூடாது. ஊடகவியலாளர்கள் தயார் என்றால் வில்பத்துவுக்கு சென்று, நீங்கள் தெரிவிப்பதுபோல் அங்கு  நடக்கின்றதா என்பதை பார்க்கலாம் என்றார்.

பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு மற்றும் வெகுசன ஊடகத்துறை பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு  மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.