பிரான்சில் நடைபெற்ற ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு பிரான்சில் 17.03.2019

501 0

பிரான்சில் நடைபெற்ற ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு
பிரான்சில் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை அனைத்துலக தமிழக்கலை நிறுவகமும் , தமிழ்ச் சோலைத்தலைமைப் பணியகமும் – பிரான்சு இணைந்து நடாத்திய ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு காலை 10.30 மணிக்கு பாரிசின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான கார்லே கோணேஸ் என்னும் பிரதேசத்தில் நுளியஉந யுளளழஉயைவகை னநள னுழரஉநவவநள நடைபெற்றிருந்தது. வரவேற்பு ஒளியை போட்டி நடுவர்கள் ஏற்றி வைக்க மங்கல விளக்கு ஏற்றிவைக்கப்பட்டது. நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது கார் லே கோணேசு முதல்வர் அவர்கள் , தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர், தமிழ்ச்சோலை தலைமைப்பணிய பொறுப்பாளர் திரு. nஐயக்குமாரன் மற்றும் ஆற்றுகை வெளிப்பாட்டுக்கு வருகை தந்த நடுவர்களும் ஏற்றிவைத்தனர்.

தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது மாவீரர்களுக்கும், மக்களுக்கும், நாட்டுப்பற்றாளர்களுடன் கடந்த13 ம் நாள் சேர்மனி நாட்டில் சாவடைந்த முனைவர். சின்னத்துரை கமலநாதன் மற்றும் 15ம் திகதி பிரான்சு பாரிசில் மாரடைப்பால் சாவடைந்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளர்களில் ஒருவரான அலெக்ஸ்சாண்டர் பவுஸ்ரின் அவர்களுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.


தொடக்கவுரையை மாநகரமுதல் ஆற்றியிருந்தார். தமிழர் கலையை யும் பண்பாட்டiயும்மொழியையும் தான் பெரிதா விரும்புவதாகவும். தொடர்ந்தும் பணிசிறக்க வாழ்த்துக்களை கூறியிருந்தார். தமிழ்ச்சோலை தலைமைப்பணியத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளரும், செயலாளருமாகிய திரு. காணிக்கைநாதன் அவர்கள் பொன்னாடை போத்தி மதிப்பளிப்புச் செய்திருந்தார்.


தொடர்ந்து வாய்ப்பாட்டு ஆசிரியர் திருவாட்டி அம்பிகை பாலகுமாரு அவர்களின் மாணவி செல்வி. பிருந்தா நடராஐh அவர்களும். வாய்ப்பாட்டு ஆசிரியர் திருவாட்டி தேவமனோகரி சுரேந்திரன் அவர்களின் மாணவி செல்வி. சிந்துஐh சகாதேவன் அவர்களும், நடன ஆசிரியர் திருவாட்டி கௌசலா ஆனந்தராஐh அவர்களின் மாணவி செல்வி. தாட்சாயினி தங்கத்துரை ( நியூலி சூ மார்ன் தமிழ்ச்சோலை) நடன ஆசிரியர் திருவாட்டி மோகனரூபி தில்லைரூபன் அவர்களின் மாணவி செல்வி. nஐனின் சிராணி காணிக்கைநாதன் ( குசன்வீல் தமிழ்ச்சோலை) தேர்வுவில் பங்கு கொண்டிருந்தனர்.


தேர்வு நடுவர்களாக Nஐர்மனி பிரதீஸ்வரா நாட்டியாலய நிறுவனர் ஆசிரியர் நடனக்கலைமணி, கலைமாணி பேராதனை வளாகம், கல்வியல் டிப்ளோம் யாழ் வளாகம் திருவாட்டி. வசுந்தரா சிவசோதி அவர்களும், நாட்டிய கலாரத்னா பாரதிதாசன் பல்கலைக்கழகம் எம்.ஏ, தஞ்சாவூர் பல்கலைக்கழகம் எம். பி திருவாட்டி, சாவித்திரி சரவணன் அவர்கள் – Nஐர்மனி, இசைக்கலைமணி யாழ்பல்கலைக்கழகம் திருவாட்டி கலாராணி குலசபாநாதன் – சுவிற்சலாந்து. இசைக்கலைமணி யாழ்பல்கலைகழகம், இளங்கலைமாணி தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைகழகம், முதுகலைமாணி தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகம் – சுவிற்சலாந்து, கலாவித்தகர் வட இலங்கை சங்கீத சபை நடன ஆசிரியை திருவாட்டி தாரணி சிறீதரன் அவர்கள் – பிரான்சு, சங்கீத வித்திவான் இசைக்கலை மணி தமிழ்நாடு இசைக்கல்லூரி திருவாட்டி. அன்ரன் நொயலா அவர்கள் – பிரான்சு. கடைமையாற்றியிருந்தனர்.


அணிசேர் கலைஞர்களாக சங்கீத கலாநிதி திரு. சுஐம்பு கரிகரன், மிருதங்கம் திரு. பிரதாப் ராமசந்திரா வயலின் திருமதி. கோமளா கந்தையா அவர்களும், நுண்கலைமாமணி திருவாட்டி தர்மிகா முரளிதரன், ஆற்றுகைத் தேர்வு நடன மாணவர்களும் தமது குருவின் நட்டுவாங்கத்துடன் உருப்படிகளாக புஸ்பாஞ்சலி, வர்ணம், தில்லானா,விநாயகர்ஸதுதி, பதம் போன்றவற்றையும் வழங்கினர். வாய்ப்பாட்டுக்கு செல்வன். சே. விநோசாந் திரு. பில்ப் அன்ரு மிருதங்கத்தையும், மோர்சிங் செல்வன். விஐயகுமார் நிதர்சன் வயலினை .செல்வன். சார்ல் பரமேஸ்வரன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.


மாலை 19.00 மணிவரை ஆற்றுகை வெளிப்பாட்டுத்துறை தேர்வு இடம் பெற்றன. மண்டபம் நிறைந்த மக்களுடன் தேர்வு நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்புரையை அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனத்தின் பொறுப்பாளர் – சுவிசு, திரு. சங்கர் அவர்கள் ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில் இன்றைய இந்த நடன ஆற்றுகைத்தேர்வு ஒரு இக்கட்டான நிலைக்குள் தான் செய்யப்படுகின்றது என்பதும் அது பிரான்சு நாட்டிலே நடாத்தும் போது மூன்று தசாப்தங்களாக தாயக விடுதலைக்காக தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுடன் தன்னை இணைத்து பணியாற்றி இன்று சாவடைந்த போன தாயகச்செயற்பாட்டாளர் புவுஸ்ரின் அவர்களையும், Nஐர்மனி நாட்டில் தமிழ்க் கல்வியில் மிகுந்த அக்கறை கொண்டு அதற்காக தன்னை அர்ப்பணித்து, தமிழர் கல்வி மேம்பட்டுப்பேரiயுடன் இணைந்து பணியாற்றிய முனைவர் கமலநாதன் அவர்களின் இழப்பிற்கு மத்தியில் தான் இந்த தேர்வை நாம் செய்கின்ற நிலையில் இவைகள் எல்லாமே அவர்கள் கண்ட கனவுகளும், உழைப்பின் அறுவடைதான் என்றதுடன். இந்த தேர்வின் பெறுமதி பற்றியும் இதில் வெற்றி பெறுபவர்கள் அடுத்த தலைமுறையை கலைரீதியாக வளர்க்கின்ற அங்கீகாரத்தை பெற்றுக் கொடுக்கின்றது என்பதையும், இதனை மிகுந்த கரிசனையுடன் தரம்வாய்ந்ததாகவும் இதை நடாத்திக் கொண்டிருக்கும் போது அதை ஒருசிலர் விமர்சனம் செய்வதும் ஒரு பக்கம் வேதனையை ஏற்படுத்தினால் விமர்சனம் செய்பவர்கள் உரிய முறையில் வெளிப்படைத்தன்மையாக உரியவர்களிடம் உரிய இடத்தில் தொடர்பு கொண்டு தமது நேர்மைத்தன்மையை சுட்டிக்காட்டுவதாக இருந்தால் அதற்கான நியாயப்பாட்டை தருவதற்கு அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனம் என்றைக்கும் பின் நிற்கப்போவதில்லை என்பதையும் தெரிவித்து தேர்வில் பங்கு கொள்ளும் மாணவர்களையும், ஆசிரியர்களையும், பெற்றோர்களையும், பாராட்டியிருந்ததுடன் எதிர் வரும் 31ம் நாள் அனைத்துக் கலை மாணவர்களுக்கும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தால், தமிழ்ச்சோலைதலைமைப்பணியத்துடன் இணைந்து பட்டமளிப்பு நிகழ்வும் நடைபெறவுள்ளது என்பதையும் தெரிவித்திருந்தார்.


நன்றியுரையை தமிழ்ச்சோலை தலைமைப்பணியக இளம் செயற்பாட்டாளர் செல்வன். நிரூசன் அவர்கள் ஆற்றியிருந்தார்.