“கடுவெல பேபி” போதைப்பொருட்களுடன் கைது

188 0

பிரபல பாதாள உலகக் குழுவின் உறுப்பினர் அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் கடுவெல பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல பாதாள உலகக் குழுவின் உறுப்பினர் அங்கொட லொக்காவின் உதவியாளரான “ கடுவெல பேபி” என அழைக்கப்படும் நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடமிருந்து 600 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் ஒரு கிலோ கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.