ஐ.தே.கட்சியின் உறுப்பினர் மீது துப்பாக்கிசூடு

223 0

பெலியத்த பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் கப்பில பிரியதர்சன அமரகோண் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவாண் குணசேகர தெரிவித்தார்.

பெலியத்த, மோதரவான பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்தே குறித்த துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் காயமடைந்த கப்பில பிரியதர்சன அமரகோண் சிகிச்சைக்காக தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.