20 ஆவது திருத்தத்தை காட்டி ஜனாதிபதி தேர்தலை பிற்போட முயற்சி- லக்ஷமன்

295 0

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு முக்கியத்துவம்  கொடுத்து  ஜனாதிபதி தேர்தலையும் பிற்போடுவதற்கான ஏற்பாடுகளை தற்போது அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர்  லக்ஷமன் யாப்பா  அபேவர்தன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போது அவர்  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையாக சமர்ப்பித்த  அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த சட்டம் தொடர்பில் தற்போது ஐக்கிய தேசிய கட்சி அதிக அக்கறை செலுத்தி வருகின்றது.  

இத்திருத்தத்தை நிறைவேற்றுவதை விடுத்து இதனூடாக ஜனாதிபதி தேர்தலையும், அதனை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலையும் ஒரு சில காரணிகளை முன்னிலைப்படுத்தி பிற்போடுவதற்கே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

எனினும் உரிய காலத்தில் தேர்தலை நடத்துவதற்கான அழுத்தங்களை எதிர்க்கட்சியினர் தொடர்ந்து பிரயோகிப்போம் என்றார்.