வாக்கெடுப்பின்றி நி்றைவேற்றப்படவுள்ள இலங்கை குறித்த ஐ.நா. பிரேரணை

16 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில்   இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள புதிய பிரேரண எதிர்வரும் 21 ஆம் திகதி வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்படவுள்ளது.  

இந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கவுள்ளதாக   இலங்கையும் அறிவித்துள்ள நிலையில் பிரேரணை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகின்றது. 

கடந்த செவ்வாய்க்கிழமை இலங்கை தொடர்பான பிரேரணை   பிரிட்டன், ஜேர்மன், கனடா உள்ளிட்ட ஐந்து நாடுகளினால் முன்வைக்கப்பட்டன. அதன்படி அந்த   பிரேரணை  21 ஆம் திகதிவிவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு பின்னர்  நிறைவேற்றப்படும்.  பிரேரணையை நிறைவேற்றும்போது  அதனை சமர்ப்பித்த நாடுகளும் இலங்கையும்  உரையாற்றவுள்ளன.  

தற்போதுவரை   இந்தப் பிரேரணைக்கு இணை  அனுசரணை வழங்குவதாக பல நாடுகள் அறிவித்துள்ளன.  அல்பேனியா, அவுஸ்திரேலியா, ஒஸ்ரியா, பெல்ஜியம், பல்கேரியா,  கனடா,  குரோஷியா,  டென்மார்க், பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி  நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, இலங்கை , சுவீடன் உள்ளிட்ட பல நாடுகள் இந்தப் பிரேரணைக்கு அனுசரணை வழங்குவதாக அறிவித்துள்ளன. 

Related Post

மட்டக்களப்பில் எதிர்வரும் 21 திகதி நடைபெறப்போகும் எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு கிழக்கு பல்காலைக்கழக மாணவ சமூகம் முழு ஆதரவு

Posted by - January 16, 2017 0
“எழுக தமிழ்” எழுச்சிப்பேரணி மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன…! கிழக்குத் தமிழ் உறவுகளே ஒன்று சேருங்கள்!! பேரினவாதம் என்பது ஒரு நூற்றாண்டு காலமாக வளர்த்தெடுக்கப்பட்டு…

அடையாள அட்டை ஒருநாள் சேவையை துரிதப்படுத்த நடவடிக்கை

Posted by - February 7, 2018 0
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக அடையாள அட்டையை விநியோகிப்பதற்கு ஒரு நாள் சேவையை துரிதப்படுத்த ஆட்பதிவுத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

வடமேல்மாகாண விளையாட்டு துறை அமைச்சராக பியசிறி ராமநாயக்க

Posted by - September 15, 2017 0
வடமேல்மாகாணத்தின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக பியசிறி ராமநாயக்க இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். இன்று காலை ஜனாதிபதி இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் வடமேல்மாகாண ஆளுநர்…

புகையிரத விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு

Posted by - August 8, 2018 0
பொல்கஹவெல, பனலிய பிரதேசத்தில் இரு புகையிரதங்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானித்துள்ளதாக புகையிரத திணைக்களம் கூறியுள்ளது. அது தொடர்பான ஆலோசனைகள் அந்த திணைக்களத்தின்…

கூட்டு ஒப்பந்த விடயத்தில் வாய் மூடி மௌனமாக இருக்க முடியாது-பழனி

Posted by - July 28, 2018 0
தொழிலாளர்கள் நலன் சார்ந்த கூட்டு ஒப்பந்த விடயத்தில் வாய் மூடி மௌனமாக இருக்க முடியாது. மலையகத்தின் இரண்டாம் தொழிற்சங்கமாக முப்பதாயிரத்திற்கு அதிகமாக அங்கத்தவர்கள் கொண்ட தொழிற்சங்கம் தொழிலாளர் தேசிய…