ஹட்டனில் வாகன விபத்து ; ஐவர் வைத்தியசாலையில்

23 0

ஹட்டன் நோர்வுட் பகுதியில் இன்று காலை 6 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒரு குழந்தை உட்பட ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஐவரும் சிவனொளிபாதமலைக்கு சென்று பதுளை நோக்கி  திரும்பிக்கொண்டிருந்த போது ஹட்டன் நோர்வுட் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்தில் காயமடைந்த ஐவரும் கிலங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த விபத்து தொடர்பில் நோர்வுட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.