வவுனியாவில் வெடிக்காத நிலையில் இரு மோட்டார் குண்டுகள் மீட்பு!

10 0

வவுனியா நெடுங்கேணியில் நேற்று மாலை விறகு வெட்ட காட்டுக்குச் சென்ற இருவர் வெடிக்காத நிலையில் இரண்டு மோட்டார் குண்டுகளை அவதானித்துள்ளனர்.

Related image

இதையடுத்து நெடுங்கேணி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு அக் குண்டுகளை செயலிழக்கச் செய்வதற்கு விஷேட அதிரடிப்படையினரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை 4மணியளவில் நெடுங்கேணி ஜயனார் கோவிலுக்கு பின்புறமுள்ள காட்டுப்பகுதிக்கு இருவர் விறகு வெட்டுவதற்குச் சென்றுள்ளனர். 

இந்நிலையில் மரம் ஒன்றில் இறுகிய நிலையில் இரண்டு மோட்டார் குண்டுகள் வெடிக்காத நிலையில் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து நெடுங்கேணிப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் புளியங்குளம் விஷேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 

இதனையடுத்து இன்றைய தினம் நீதிமன்ற அனுமதியைப் பெற்று இரண்டு குண்டுகளையும் செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related Post

மாங்குளம் பகுதியில் மாடு குறுக்கிட்டதால் ஏற்பட்ட விபரீதம்; 30 பேர் காயம்

Posted by - April 7, 2018 0
வவுனியா மாங்குளம் பகுதியில் தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 30 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். விபத்து சம்பவம் பற்றி தெரிவருவதாவது, வவுனியாவிலிருந்து விசுவமடு நோக்கி…

பெண்களின் வீரத்தை உலகிற்கு காட்டியவர் தேசியத் தலைவர் பிரபாகரன்!

Posted by - March 10, 2019 0
பெண்களின் விடுதலை, தலைமைத்துவம், ஒழுக்கம், பண்பாடு, மேம்பாடு, உரிமைகள் அத்தனையையும் உள்ளடக்கிய ஒரு வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை உலக அரங்கில் பறைசாற்றிய ஒப்பற்ற தலைவர் தமிழீழ…

சட்டவிரோதமாக ஆற்று மணல் கடத்தியவர் கைது!

Posted by - March 15, 2018 0
மட்டக்களப்பு – வெல்லாவெளி பிரதேசத்தில் சட்டவிரோதமாக ஆற்று மணலை  ட்ரக்டரில் எடுத்துச் சென்ற ஒருவரை இன்று  காலை கைது செய்துள்ளதுடன் ட்ரக்டரையும் மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

ஒழுக்கமின்றி நீதிமன்றம் நுழைந்தால் விளக்கமறியல்

Posted by - February 8, 2019 0
நீதிமன்றத்துக்கு நேர்த்தியாக ஆடை அணியாமல், தலைமுடி வெட்டாமல் ஒழுக்கம் பேணாது வருவோர்களாயின், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவார் என யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் தெரிவித்துள்ளார்.  யாழ்ப்­பா­ணம் நல்­லூர்,…

வடமாகாண ஆளுநர் சுகாதார அமைச்சருடன் சந்திப்பு

Posted by - April 3, 2017 0
வடக்கிற்கு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள மத்திய சுகாதாரஅமைச்சர்  வடக்கில் பல சந்திப்புகளில் ஈடுபட்டு வரும் நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கும்  மத்திய…