முறைப்பாடு செய்ய சென்றவர்களை திருப்பி அனுப்பிய யாழ் பொலிஸார்!

15 0

வெளிநாடுகளுக்கான விமான சேவை பயணச்சீட்டுக்களை போலியாக விநியோகித்து பல இலட்சம் ரூபா பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகிய பயண முகவர் நிறுவன முகாமையாளருக்கு எதிராக முறைப்பாடு வழங்க  பாதிக்கப்பட்டவர்கள் இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு சென்றிருந்தனர்.

எனினும் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த பொலிஸார், பாதிக்கப்பட்டவர்களை நாளை மு.ப. 10 மணிக்கு முறைப்பாட்டை வழங்க வருமாறு கூறித் திருப்பி அனுப்பினர்.

யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள பயண முகவர் நிறுவனத்துக்கு எதிராகவே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரிவித்து 35 பேருக்கு மேற்பட்டவர்கள் இன்று வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு சென்றனர்.

அந்த நிறுவனத்தில் வெளிநாடுகளுக்குப் பயணிப்பதற்கு சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவைக்கு பணம் செலுத்தி முற்பதிவு செய்துள்ளனர். எனினும் அந்த நிறுவனத்தால் வழங்கப்பட்டது போலி விமான பயணச் சிட்டை என அவர்கள் பின்னரே அறிந்துள்ளனர்.

அதுதொடர்பில் அந்த நிறுவனத்தை நாடிய போது, அதன் முகாமையாளர் இல்லை என அங்கு பணியாற்றிய பெண் பணியாளர் ஒருவர் தெரிவித்து வந்துள்ளார். முகாமையாளர் வந்ததால்தான் பணத்தை மீள வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று போலி விமானச் சிட்டை எனத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு வழங்க இன்றைய தினம் சென்றனர். அவர்களுடன் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள பங்காளர் எனத் தெரிவித்த ஒருவரும் தனது சட்டத்தரணியுடன் பொலிஸ் நிலையத்துக்கு சென்றார்.

பாதிக்கப்பட்டவர்களால் பயண முகவர் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் பணியாளரும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டிருந்தார். அத்துடன், அந்த நிறுவனத்தின் உதவி முகாமையாளர் எனத் தெரிவித்த ஒருவரும் வருகை தந்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், பாதிக்கப்பட்டவர்களை நாளை(16) மு.ப. 10 மணிக்கி முறைப்பாடு வழங்க வருமாறு யாழ்ப்பாணம் பொலிஸார் திருப்பி அனுப்பியுள்ளனர்.

Related Post

தென்னிலங்கை மீனவர்கள் வடக்கிற்கு பருவகால தொழிலுக்காக வரலாம்!

Posted by - August 19, 2018 0
தென்னிலங்கை மீனவர்கள் வடக்கிற்கு பருவகால தொழிலுக்காக வரலாம். ஆனால் அவர்கள் வடமாகாணத்திலேயே நிரந்தரமாக தங்கியிருக்க முயற்சிப்பதை நாம் கண்டிக்கிறோம் என, தேசிய ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் அ.ஜேசுதாஸ்…

மாவிட்டபுரம் விவகாரம் – மீண்டும் குருக்களுக்கு அழைப்பாணை – தமிழ்த் தேசியப் பேரவைக்கும் அழைப்பு!

Posted by - January 29, 2018 0
மாவிட்டபுரம் ஆலய சூழலில் தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டதான குற்றச்சாட்டின் அடிப்படையில் மீண்டும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் சட்டத்தரணி விசுவலிங்கம் மணிவண்ணன், ஆலய பிரதம…

யாழின் இருவேறு பகுதிகளில் வாள்வெட்டு – இருவர் படுகாயம்

Posted by - January 16, 2018 0
யாழில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில், இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். ஆணைக்கோட்டை வராகி அம்மன் கோவில் அருகிலும், பூநாரி…

யாழ்ப்பாணத்தில் 2,691 பேர் பட்டதாரிகள் நியமனத்திற்கு தகுதி

Posted by - April 30, 2018 0
யாழ்ப்பாண மாவட்டத்தில் நேர்முகத் தேர்விற்காக அழைக்கப்பட்ட பட்டதாரிகளில் 668 பட்டதாரிகள் நேர்முகத் தேர்விற்குத் தோற்றவில்லை என மாவட்டச் செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள்…

கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் விரைவில் திறக்கப்படும்

Posted by - August 28, 2016 0
கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு நீண்டகாலமாக திறக்கப்படாதிருக்கும் கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் விரைவில் திறக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.