மன்னாரிலும் அதிபர், ஆசிரியர்கள் சுகயீன விடுமுறை போராட்டம்

14 0

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் தமிழர் ஆசிரியர் சங்கத்தினால் இலங்கை முழுவதும் ஆசிரியர்கள் கருப்பு பட்டி அணிந்து தமது எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று காலை  சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று காலை 8 மணி முதல் 8.30 மணிவரை தமது பாடசாலைகளுக்கு முன்பாக கருப்பு பட்டி அணிந்து சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும், 2019 ஆம் ஆண்டு அரசினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பாதீட்டில் கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டின் அளவை அதிகரித்தல் வேண்டும், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அழுத்தங்கள்  உடனடியாக நிறுத்த வேண்டும்,ஆசிரியர்களின் மான்பினை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.
குறித்த போரட்டத்தின் பின் பாடசாலையின் செயற்பாடுகள் வழமை போல் இடம் பெற்றமைகுறிப்பிடத்தக்கது.

Related Post

யானைகுட்டியின் சடலம் மீட்பு

Posted by - September 21, 2018 0
வவுனியா ஓமந்தை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட இளமருதங்குளம் பகுதியில் உள்ள மறாவிலுப்பை குளத்தில் இன்று காலை யானைகுட்டி ஒன்று குளத்தில் மூழ்கி கிடந்துள்ளது. இதனை அவதானித்துள்ள ஊர்வாசிகள் பொலிஸாருக்கு தகவல்…

சர்வதேசம் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுக்க வேண்டும்

Posted by - April 5, 2017 0
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சர்வதேச நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு நெருக்குதல்களை கொடுப்பதன் மூலமே மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்க முடியுமென சர்வதேச மன்னிப்புச் சபையின் தலைவர் சலில்…

உறுதியுடன் போராடுங்கள் வெற்றி நிச்சயம் கேப்பாபிலவு போராட்டத்துக்கு சம்பூர் மக்கள் ஆதரவு

Posted by - February 12, 2017 0
பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணி இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பிலவுக்குடியிருப்பு மக்கள் இரவு பகலாக கொட்டும் பணியையும் கொளுத்தும் வெயிலையும் பாராது பதின்மூன்றாவது…

யாழ். பல்கலை மாணவர்களின் மாவீரர் தின நிகழ்வுக்கு தடை உத்தரவு கோரி மனு

Posted by - November 22, 2018 0
யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்படும் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்து உத்தரவிடுமாறு கோரி கோப்பாய் பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட மனுவுக்கான தீர்ப்பு நாளை (23) வழங்கப்படவுள்ளதாக யாழ். மஜிஸ்ட்ரேட்…

கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் புதிய சாதனை

Posted by - April 24, 2017 0
23 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.