கிளிநொச்சி பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் பகிஸ்கரிப்பில் …

12 0

நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள பணி பகிஸ்கரிப்பில் கிளிநொச்சி பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

குறித்த போராட்டத்திற்கு ஆசிரிய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் கிளிநாச்சியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். 

பாடசாலைகளிற்கு மாணவர்கள் வழமைபோல் வருகை தந்திருந்த நிலையில் குறித்த போராட்டம் சுமார் அரை மணிநேரம் முன்னெடுக்கப்பட்டது. 

இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் சார்பில் கருத்து தெரிவிக்கையில்,

எமது பிரதேசத்தில் தொடர்ச்சியாக வந்த கர்த்தால், பாடசாலை விடுமுறை நாட்களை கருத்தில்கொண்டும், மணவர்களின் கல்வி, பரீட்சைகளை கருத்தில்கொண்டும் வடக்கு கிழக்கு பகுதிகளில் கடமையாற்றும் ஆசிரியர்களான நாம் போராட்டத்தை அரை மணிநேரமாக மட்டுப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். 

இன்று பாடசாலைகளில் மாணவர்களின் ஒழுக்கம் மிகவும் மோசமாக உள்ளது. ஆசிரியர்களிற்கு வழங்கப்படும் கடமைகளில்கு மேலதிகமாக எழுத்து வேலைகளு அதிகமாக வழங்கப்படுகின்றது. வெளிநாடுகளை போல் அல்லாது எமது கல்வி கற்பிக்கும் செயற்பாடானது மிகவும் மோசமாக உள்ளது. 

வெளிநாடுகளில் ஆசிரிய துறையை தேடி பலரும் விரும்பி செல்கின்றனர். இலங்கையில் ஆசிரியர் துறையிலிருந்து பலரும் விலகி வேறு வேலைகளை நோக்கி செல்கின்றனர். இவ்வாறன நிலை மாற்றப்பட்டு சீரான கல்வி செயற்பாட்டை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.

Related Post

புதுக்குடியிருப்பில் வணிகர் கழத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் நினைவு நிகழ்வு(காணொளி)

Posted by - September 26, 2018 0
முல்லைத்தீவு , புதுக்குடியிருப்பில் வணிகர் கழத்தின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபன் நினைவு நிகழ்வு அனுஸ்டிக்கப்பட்டது. 12 நாட்களாக நீராகாரம் எதுவுமின்று உண்ணா நோன்பிருந்த, தியாகி திலீபனின் 31…

அரச மருத்துவ சங்க பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கருத்து தொரிவித்த வைத்தியக் கலாநிதி பி.பவானந்தராஜா………. (காணொளி)

Posted by - May 5, 2017 0
அரச மருத்துவ சங்க பணிப்புறக்கணிப்பு தொடர்பில் கருத்து தொரிவித்த வைத்தியக் கலாநிதி பி.பவானந்தராஜா……

யாழ். குடாநாட்டினைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் நில விடுவிப்பு – சுவாமிநாதன்

Posted by - July 27, 2016 0
யாழ். குடாநாட்டினைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் நில விடுவிப்புத் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதாக மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகளில்…

சட்டத்தை நடைமுறைப்படுத்த குழுக்கள் தேவையில்லை-சார்ள்ஸ் நிர்மலநாதன்(காணொளி)

Posted by - December 3, 2016 0
சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு குழுக்கள் தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே, சார்ள்ஸ்…

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு

Posted by - October 24, 2017 0
முல்லைத்தீவு அம்பலவன் பொக்கனை பாடசாலைக்கு முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இன்று பிற்பகல் தேடுதல் நடத்தப்பட்டது. நீதிமன்ற அனுமதியுடன் இடம்பெற்ற…