ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 11 போலீசார் பலி!

10 0

ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 11 போலீசார் பலியாகினர். 

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள பட்கிஸ் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அங்கு இவர்கள் பாதுகாப்புபடை வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து தொடர் தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், தலைநகர் குவாலா இ நவ்வில் முகூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது நேற்று முன்தினம் நள்ளிரவு தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு போலீசார் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 போலீசார் பலியாகினர். அதே சமயம் இந்த சண்டையின் போது பயங்கரவாதிகள் பலரும் கொல்லப்பட்டனர்.

ஆனால் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.  

Related Post

லண்டன் தீ விபத்தில் உயிரிழப்பு 17 ஆக அதிகரிப்பு

Posted by - June 15, 2017 0
லண்டன் நகரின் மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. ஏராளமானோர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவத்தை போன்று வேறு எந்த நாடும் பயங்கரவாதத்தை எதிர்த்து போரிட்டதில்லை – இம்ரான் கான்

Posted by - September 7, 2018 0
வேறு எந்த நாட்டின் ராணுவமும் பாகிஸ்தான் ராணுவத்தை போன்று பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்டதில்லை என அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். 

கார் விபத்து எதிரொலி – டிரைவிங் லைசென்சை திருப்பி அளித்தார் இளவரசர் பிலிப்

Posted by - February 10, 2019 0
இங்கிலாந்து இளவரசர் பிலிப் கார் விபத்தை ஏற்படுத்தியதால், தனது டிரைவிங் லைசென்சை திருப்பி அளித்துள்ளார்.  இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், இளவரசருமான பிலிப் (97), ஓட்டிச்…

சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 25-வது இடம்

Posted by - March 8, 2017 0
சர்வதேச அளவில் பொருளாதார காரணிகளில் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 25 வது இடம் கிடைத்துள்ளது.

மசிடோனியா நாட்டில் நிலநடுக்கம்

Posted by - September 12, 2016 0
மசிடோனியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வீடுகள் இடிந்ததில் 30 பேர் காயம் அடைந்தனர்.ஆப்பிரிக்க நாடான மசிடோனியாவில் நேற்று மாலை 3 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர்…