போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை தரையிறக்க எந்த முகாந்திரமும் இல்லை- அமெரிக்கா

11 0

போயிங் 737 மேக்ஸ் 8 விமானங்களை தரையிறக்குவதற்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை என அமெரிக்க விமான போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. #

எத்தியோப்பியாவில் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர். 

இதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், இந்தியா, சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்துள்ளன. மேலும் சில நாடுகளும் விமான பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றன. எனவே, போயிங் நிறுவனத்துக்கும், அமெரிக்க அரசுக்கும் அழுத்தம் அதிகரித்துள்ளது.  

‘போயிங் 737 மேக்ஸ் 8’ விமானங்களில் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை இருப்பதை விமானப் போக்குவரத்து நிர்வாகம் கண்டறிந்தால், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்துத்துறை தெரிவித்திருந்தது.

ஆனால், இதுவரை நடத்திய ஆய்வில், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானத்தில் செயல்திறன் குறைபாடுகள் கண்டறியப்படவில்லை என்றும், விமானங்களை தரையிறக்குவதற்கு எந்த அடிப்படை முகாந்தரமும் இல்லை என்றும் அமெரிக்க விமான போக்குவரத்து கழக தலைவர் டேனியல் எல்வெல் கூறியுள்ளார்.

பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக மற்ற விமான போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் இருந்தும் இதுவரை தகவல் வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் மொத்தம் 74 ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. பெரும்பாலும் யுனைட்டெட் ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இந்த விமானங்களை இயக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

முன்னாள் காதலிக்கு உயரிய பதவி வழங்கிய வட கொரிய அதிபர்

Posted by - October 12, 2017 0
வடகொரியாவில் பிரபல பாடகியாக வலம் வந்த ஹயோன் சாங் வோல் கடந்த 2013 ஆம் ஆண்டு பாலியல் காணொளி ஒன்றை தயார் செய்தார் என்ற குற்றத்திற்காக அதிரடிப்படையினரால்…

மியன்மாரில் ரொஹிங்கிய முஸ்லிம்கள் தாக்க காணொளி பதிவுகள் குறித்து விசாரணை

Posted by - January 2, 2017 0
மியன்மாரில் ரொஹிங்கிய முஸ்லிம்கள், காவல்துறையினரால் தாக்கப்பட்டமை தொடர்பான காணொளி பதிவுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மியன்மார் அரசாங்கம் இதனை அறிவித்துள்ளது. மியன்மார் நாட்டின் சிறுபான்மை மக்களான ரொஹிங்கிய…

இந்தியா – நெதர்லாந்து இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து

Posted by - June 28, 2017 0
பிரதமர் மோடியின் பயணத்தின்போது இந்தியா – நெதர்லாந்து இடையே சமூக பாதுகாப்பு, நீர் மற்றும் கலாசார ஒத்துழைப்பு என 3 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயிற்று.

துபாய் சர்வதேச புனித திருக்குர்ஆன் போட்டி: முதல் இடம் பிடித்த அமெரிக்க போட்டியாளர்

Posted by - June 17, 2017 0
துபாயில் நடைபெறும் 21ஆம் சர்வதேச புனித குர்ஆன் ஓதும் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த போட்டியாளர் ஹுஸைஃபா சித்தீகி முதல் இடத்தைப் பிடித்தார்.

’அப் கி பார் ட்ரம்ப் சர்க்கார்’ இந்தியில் பேசி இந்தியர்களை வளைக்க ட்ரம்ப் முயற்சி!

Posted by - October 28, 2016 0
அப் கி பார் ட்ரம்ப் சர்க்கார்’ என்று இந்தியில் பேசி அமெரிக்க இந்தியர்களுக்கு வலை வீசியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப். 30 நொடிகள் ஓடக்கூடிய விளம்பரத்தை ட்ரம்ப் தரப்பு…