வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 43 வாக்குகளால் நிறைவேற்றம்!

282 0

019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 43 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 119 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 76 வாக்குகள் அளிக்கப்பட்டன. 

கடந்த 5 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றுடன் நிறைவடைகின்றது. 

அதற்கமையை வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதாக தெரிவித்திருந்ததுடன் மக்கள் விடுதலை முன்னணி இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதாக தெரிவித்திருந்தது 

அதேநேரம் கூட்டு எதிர்க்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பும் இம்முறை வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதாக தெரிவித்திருந்தது 

இதேவேளை வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு நாளை முதல் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி வரையில் இடம்பெற உள்ளதுடன் அன்றைய தினம் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பும் இடம்பெற உள்ளது.