பொலிஸ் நிலைய அதிபர்கள் 56 பேருக்கு இடமாற்றம்

283 0

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் நிலைய அதிபர்கள் 56 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிப்படி சேவையின் அவசியம் கருதி இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது. 

அதன்படி பொலிஸ் பரிசோதகர்கள் 20 பேர் மற்றும் பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் 36 பேருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த ஜனவரி மாதம் இந்த இமாற்றம் வழங்கப்பட இருந்த போதிலும் அது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்ததாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.